பிரதி அமைச்சரின் செய்தி

 

 

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன (பா.உ)

 வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் www.msdw.gov.lkஎன்ற புதிய இணையத் தளத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை முதன் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நவீன தொழில்நுட்பத்துடன் தற்கால உலகின் தகவல் பரிமாற்றம் மிகவேகமாக உள்ளது. முழு உலகமும் இப்போது தொழில்நுட்பத்தின் புதுமைப்பாங்குடன் ஒரு புறத்திலிருந்து கிராமமையமாக அமைந்துள்ளது. அதற்காக இணையத்தளத்தின் மூலம் பரந்தளவினாலான தகவல் வலையமைப்பு ஊடுவலையிற்கு ஒன்றுசேர்க்கப்படும்.

இதற்கமைய வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு புதிய இணையத்தளமொன்றினை தொடங்கி ஊடுவலையினூடாக உலகிற்கு உட்பிரவேசிப்பது மிகவும் முக்கியமானதாகவுள்ளது.

வனசீவராசிகள், அலங்காரமலர்கள், பல்வேறு மரஞ் செடிகொடிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாக்கப்படுவது நம் அனைவரினதும் கடமையாகும். அது எதிர்கால நலன்கருதி கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். அவ் அளப்பறிய சேவைகளை ஆற்றுகின்ற பல நிறுவனங்கள் காணப்படுவதுடன்,மகத்தான சேவைகளை வழங்குகின்ற பதவியிணரும் அமைச்சின் கீழுள்ள தாபனங்களில் சேவையாற்றுகின்றனர்.

இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் மற்றும் அக்குறித்த வளங்களின் பெறுமதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் வீடியோ நாடாக்களை அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம்பெற்றுக் கொள்ளமுடியும்.

அத்தகவல்கள் பாடசாலை சிறார்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு மற்றுமல்லாது வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் பெறுவதென்பது வெள்ளிடை மலையாகும்.

நாட்டுக்காக அளப்பறிய பணியினை ஆற்றுவதற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் இணையத்தளத்திற்கு இயலுமானதாக அமைவதற்கு பிரார்த்தனை புரிகின்றேன்.

 

 

சுமேதா ஜீ. ஜயசேன (பா.உ)

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்.