தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

தொலைநோக்கு

தாவரங்களைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்தல் ஆகிய பணிகளோடு அயன வலயத்தின் மிகச் சிறந்த விஞ்ஞான ரீதியானதும் அழகு மிகுந்ததுமான தாவரவியல் பூங்காவாக திகழ்தல்”.

தொலைநோக்கு

இயற்கையான மற்றும் செயற்கை யான சூழலொன்றில் தாவர ஆய்வு,அவற்றின் நிலையான பேணுகை மற்றும் அதற்கான பெறுமானம் என்பவற்றினூடாக மக்களை கவர்தல்”.

பிரதான பணிகள்

 • இலங்கையின் தாவரவியல் பல்வகைத் தன்மையினை பாதுகாப்பதில் வெளிவாரிப் பாதுகாப்பு முறைகளை செயல்வலுப் பெறச் செய்வது தொடர்பில் தேவையான திட்டங்களை வகுத்தலும் செயல்படுத்தலும்.
 • கல்வி மற்றும் தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தி இலங்கையின் தாவர வளங்கள் சம்பந்தமாகவும் தாவர வளங்களுடன் தொடர்புற்றுக் காணப்படும் பல்வேறு வகையான கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் சரியான தகவல்களையும் கலையறிவினையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். 
 • இலங்கையில் பூச்செடிச் செய்கைக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தொழில் நுட்ப முறைகளை பரீட்சித்தல் மற்றும் செயல்படுத்துதல்.
 • இலங்கையின் தேசிய தாவரவியல் பூங்காக்களை உயர்தரத்தில் பராமரித்துப் பேணல்.
 • பொருத்தமான இடங்களில் புதிய தாவரவியல் பூங்காக்களை உருவாக்குவதற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தலும் செயல்படுத்தலும்.
 • அலங்கார தாவரவியல் ஆய்வினை இலங்கையில் விஸ்தரிப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்களை அமுலாக்குதல்.
 • இலங்கையின் அடையாளம் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாவரங்களை பாதுகாப்பதற்குத் தேவைப்படும் தொழில் நுட்ப ஆலோசனைககளை வழங்குதல்.
 • அநுராதபுரம் புனித அரச மரத்தின் ஆரோக்கியத்தைப் பேணுதல்.

திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் ஏனைய அலகுகளாவன:

 • தாவரவியல் பூங்கா. பேராதனை
 • தாவரவியல் பூங்கா, ஹக்கல 
 • தாவரவியல் பூங்கா கம்பஹா ஹெனரத்கொட 
 • தேசிய தாவரவகம்
 • மூலிகைத் தாவரவியல் பூங்கா, கனேவத்த 
 • உலர்வலய தாவரவியல் பூங்கா மிரிஜ்ஜவில, ஹம்பாந்தோட்டை
 • ஈரவலய தாவரவியல் பூங்கா,அவிசாவளை,சீத்தாவக்க 
 • பூச்செடியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி அலகு,பேராதனை
 • கல்விநிலையம்,பேராதனை
 • ஜனாதிபதி மாளிகைப் பூங்கா,கொழும்பு
 • அலரிமாளிகைப் பூங்கா,கொழும்பு
 • பிரதமர் அலுவலகப் பூங்கா,கொழும்பு
 • ஜனாதிபதி மாளிகைப் பூங்கா,கண்டி
 • ஜனாதிபதி மாளிகைப் பூங்கா,நுவரெலியா
 • பிரதமர் அலுவலகப் பூங்கா, நுவரெலியா
 • ஜனாதிபதி மாளிகைப் பூங்கா,அநுராதபுரம்
 • சுவஹஸ் மல் செவன அலுவலகம்
 • ஹரித பியஸபயிற்சி நிலையம்
 • திணைக்களத்தின் பிரதான அலுவலகம்
 • பிட்டகந்த பொதுநலவாய யுத்தமயான பூமி, கண்டி
 • பொதுநலவாய யுத்தமயான பூமி, பொரலை
 • பொதுநலவாய யுத்தமயான பூமி, ஜாவத்தை
 • பொதுநலவாய யுத்தமயான பூமி,  நிலாவெளி, திருகோணமலை