தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களம்

அறிமுகம்

வன விலங்குகளை பிடித்து வெளிநாட்டு மிருகக் காட்சிசாலைகளுக்கு அனுப்பும் வரை தரித்து வைத்திருப்பதற்கான தனியார் வனவிலங்கு சேகரிப்பிடமாக  1920   ஆண்டிற்கு முன்னர் இம் மிருகக்காட்சிசாலை தாபிக்கப்பட்டது.

தெஹிவல பிரதேசத்தில் ஏறத்தாழ 11 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் ஜெர்மனி நாட்டவரான திரு. ஜோன் ஹாகென்பர்க் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட  தெஹிவல மிருகக்காட்சிசாலை 1936 ஆம் ஆண்டு 01 ஆந் திகதி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.

அதன் பின்னர் இம் மிருகக்காட்சிசாலை 1946 ஆம் அண்டு சுயாதீன அரசாங்க திணைக்களமான மாற்றம் பெற்றது.  ிருகக்காட்சிசாலையின்  நிர்வாகம் மற்றும் முகாமைத்துவப் பணிகள் 1982  ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய மிருகக்காட்சிசாலை சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இத் திணைக்களத்தின்  கீழ் தெஹிவல மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலைகளின் இலங்கை வலயம் எனும் மூன்று செயற்பாட்டுப் பிரிவுகளது காட்சிப்படுத்தல் நடவடிக்கைகள்  ஆகியன முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ரிதியவல சபாரி பூங்காவின் நிர்மாணப் பணிகளும்  மேற்கொள்ளப்படுகின்றன.

தொலைநோக்கு

உலகின் மிகச் சிறந்த மிருகக்காட்சிசாலையைப் பேணுகின்ற நிறுவனமாகத் திகழ்தல்

பணிநோக்கு

நவீன மிருகக்காட்சிசாலை எண்ணக்கருவின் கீழ், கண்கவர் சிற்பமுறைகள் மற்றும் தேர்ச்சி முறைமைகளினூடாகவும் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும்  அதிகூடிய பாதுகாப்புடனான இருப்பிடங்களை வழங்கி, பல்வகைமைத் தன்மையுடன்  கூடிய    ஆரோக்கியமான விலங்கினங்களை  கூட்டாக காட்சிப்படுத்தல்

பிரதான பணிகள்

 • இயற்கைச் சூழலை அண்டிவாழும் பல்வகைத்தன்மையுடன் கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விலங்குகளை  கூட்டாகப் பேணிச் செல்லல்.
 • நலனோம்பல் மற்றும் இயற்கையான நடத்தை ஆகிய அம்சங்களை உறுதிப்படுத்தல் ,தரித்து வைத்துள்ள விலங்குகளின் இருப்பு
 • அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மற்றும் அருகிவரும் இந்நாட்டின் தனித்துவமான விலங்கினங்களின்பால் கூடிய கவனம் செலுத்தி விலங்குகளின் வெளியக பராமரிப்பை உறுதிப்படுத்தல். 
 • அருகிவரும் விலங்குகினங்களைப் பாதுகாத்தல்
 • பாதுகாப்பான இனவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை  நடைமுறைப்படுத்தல்
 • விலங்குகள் மற்றும் ஏனைய மிருகக்காட்சிசாலை விடயங்கள்  தொடர்பான அறிவை விருத்தி செய்வதற்காக ஆராய்ச்சிகளை நடாத்தல்
 • விலங்குகளின் வாழ்வியல் நடைமுறைக்கு ஆகக்குறைந்த அளவிலேனும் தடைகள் ஏற்படா வண்ணம் அறிவை விருத்தி செய்தல் மற்றும் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை காட்சிப்படுத்தல்.
 • பாடசாலை மாணவர்களின் முறைசாரா கல்வி  நடவடிக்கைகளுக்கு துணைபுரியும்  நோக்குடன் தொலைக் கல்வி நிகழச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • சுற்றாடல் ரீதியிலான புலம்பெயருதலை ஊக்குவித்தல் மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியன  தொடர்பான நவீன எண்ணக்கருக்களின் ஊடாக சுற்றுலாத் துறையின் தேவைகளை பூர்த்திசெய்தல். 
 • நாட்டில் மிருகக்காட்சிசாலைகளை தாபித்தல் மற்றும் மீன்காட்திட்டமிடல் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை  தயாரித்தல். ,சியகத்தின் (மின்மெதுர) நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்  தொடர்பான கொள்கைகள்
 • ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள்  தொடர்பாக பாதுகாப்பானதும் திருப்திகரமானதுமான சூழலை ஏற்படுத்தல்.
 • சித்திட்டங்களில் பங்களிப்புச்செய்தல்.;தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றும் விலங்கினப் பரிமாற்ற நிகழச்  ,மிருகக்காட்சிசாலை வலையமைப்புகள் என்பவற்றில் முனைப்பாக பங்களித்தல் ,சர்வதேச அமைப்புக்கள்
 • மாணவர்கள் மற்றும் அது  தொடர்பாக. , வெளித்தரப்னர்  ,தொண்டாளர்கள் தன்னார்வ வெளிநாட்டு உள்நாட்டு ,மிருகக்காட்சிசாலைகள் தொடர்பாக அபிமானத்துடன்  செயற்படக்கூடிய விசேட அமைப்புக்கள்
 • உள்நாட்டு  வெளிநாட்டு தன்னார்வ அலுவலர்கள்,வெளித்தரப்பினர், மாணவர்கள் மற்றும் அது  தொடர்பாக முனைப்புடன் பங்களிப்பு நல்க காத்திருக்கும் குழுக்கள்  ஆகியனவற்றுக்கு ஊக்கமளித்தல்.  ,மிருகக்காட்சிசாலைகள்  தொடர்பாக பற்றுணர்வுள்ள விசேட  அமைப்புக்கள்
 • நூதனசாலைகள் மற்றும் நூலகங்கள் போன்ற உபகாரச் சேவைகளை அபிவிருத்தி செய்தல்.  ,வேறாக அமைக்கப்பட்டுள்ள சேவைப் பிரிவுகள்;வௌ  ,விலங்குகளின் மருத்துவமனைகள் ,நவீன ஆய்வுகூடங்கள் ,கேட்போர்கூடங்கள் ,கற்புல செவிப்புல பிரிவுகள் ,உணவு வழங்கும் விவசாயப் பண்ணைகள்
 • விலங்கின பராமரிப்புகளுக்கு  ஏற்றவாறான சுற்றாடல் பாதுகாப்பு அளவீடுகளுக்கமைய செயற்படுதல் 
 • தொடர்ச்சியான பேணல் மற்றும் தரமுயர்த்தல் நிகழ்ச்சித்திட்டங்களை  நெறிப்படுத்தல்.
 • பொது மக்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றுடன் அன்னியோன்னிய  முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

பிரதான குறிக்கோள்கள்

 • விலங்குகளின் முகாமைத்துவம் மற்றும் நலனோம்பல்
 • பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம்
 • ஆராய்ச்சி
 • கண்காட்சிகள் மற்றும் கல்வி நிகழச்;சிகள்
 • இரசனை மற்றும்  பொழுதுபோக்க