வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

 

அறிமுகம்

இலங்கையின் பாரிய பல்லுயிர்த்தன்மைக்கு கட்டியம் கூறுகின்ற இவ்வாறான  தாவரங்கள் மற்றும்  கால்நடைகளையும் மனிதர்கள் வாழ்கின்ற சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு  வனசீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1949 ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட வனசீவராசிகள் திணைக்களத்தின் பிரதான கடப்பாடு  என்னவெனில், அது இலங்கையில் உள்ள  வனசீவராசி வளங்களைப் பாதுகாப்பது ஆகும். அதற்கமைய இலங்கையின்  அனைத்து ஆற்று  மூலங்களையும் விவசாயத்துறை மற்றும் மின்சார உருவாக்கம் தொடர்பாக நீரை வழங்குகுன்ற பாரியவிலான நீர்த்தேங்கள் உட்பட 40 நீர்த்தேக்கங்களின் நீரேந்துப் பகுதிகள் பாதுகாக்கப்படுவது வனசீவராசிகள் காப்பிட வலையமைப்பின் ஊடாகவே ஆகும். இந் நாட்டின் மொத்த நிலப்பரப்பில்  13% ஐ விஞ்சிய வனசீவராசிகள் காப்பிட வலையமைப்பு முகாமைப்படுத்தப்படும்  போது வனசீவராசிகள் பாதுகாப்பு  திணைக்களத்திடமே அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகின்றது. அவ் வனசீவராசிகள்  காப்பிட வலையமைப்பு  பல்வேறு பாதுகாப்பு மட்டங்களின் கீழ் பிரசகடனப்படுத்தப்பட்ட வனசீவராசிகள் காப்பிடங்களையும் உள்ளடக்கியுள்ளன.

தொலைநோக்கு

‘‘இன்றைய மற்றும் நாளைய சந்ததியினருக்காக வனசீவராசி வளங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்தல்

பணிநோக்கு

‘‘அனைவரும் ஒன்றிணைந்து தொழில் சார்ந்த ஒரு முகாமைத்துவத்தினூடாக வனசீவராசி வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்

 பணிப்பொறுப்பு

 • அனைத்து பூகோள, காலநிலை மற்றும் பல்லினத்தன்மை வலையங்களினுள் வனசீவராசி வளங்களை போதியளவில் உள்ளடக்கியுள்ள  இலங்கை வனசீவராசிகள் வனப்பாதுகாப்பு வலையமைப்பை தாபித்தலின் மூலம் அவற்றின் ஸ்திரத்தன்மையை பேணல்.
 •  விவசாயத்துறை, நீர்மின்சார உருவாக்கம் தொடர்பாக  நீர் வழங்குகின்ற பாரியளவிலான நீர்த்தேங்களின் நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாத்தல், சமய மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பேணல், தனித்துவமான அரிதான வனசீவராசிகளை பாதுகாத்தல், விசேட சுற்றாடல் முறைமைகளை பாதுகாத்தல் ஆகிய  விசேட நோக்கங்களைக் கொண்டுள்ள வனசீவராசிகள் ஒதுக்கிடங்கள்  பிரகடனப்படுத்தப்பட்டு வனசீவராசிகள் ஒதுக்கிடங்கள் வலையமைப்பை உரியவாறு முகாமைப்படுத்தல்.
 •  மலடாக கூடிய அச்சுறுதலுக்கு ஆளாகியுள்ள தேசிய வனசீவராசிகளை பாதுகாப்பது தொடர்பாக தகுந்த செயன்முறைகளை கையாண்டு விசேட செயற்திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம்அவ்வுயிரினங்களின் நீண்டகால இருப்புக்கு  உத்தரவாதமளித்தல் 
 • வனசீவராசிகள் காப்பிடங்களிலில் இருந்து வெளிப் பிரதேசங்களில் பாதுகாப்பாக வாழக்கூடியவாறு   வனசீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
 • தற்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய வனசீவராசிகள் கொள்கை மற்றும் சட்டத்தை  விளைதிறன்  வாய்ந்த  முறையில் கையாளல்.
 •  இலங்கை  அரசாங்கத்தினால்  கையொப்பமிடப்பட்டுள்ள வனசீவராசிகள்  பாதுகாப்பு குறித்து மலடாகக் கூடிய வாய்ப்புள்ள விசேட உயிரினங்களின் வியாபாரம் தொடர்பான  சமவாயம் (CITES)" சர்வதேச முக்கியத்துவம்  வாய்ந்த ஈரலிப்பு பிரதேசங்கள் தொடர்பான சமவாயம் (Ramsar) மற்றும்  குடிபெயரும் கால்நடைகளின்  பாதுகாப்பு தொடர்பான சமவாயம் (CMS - Bonn) ஆகிய சர்வதேச சமவாயங்களின் செயற்பாடு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய செயற்படுதல்.
 •  வனசீவராசிகள் காப்பிடங்களுக்கு அருகே சுற்றாடல் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன்  மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பை வழங்க முடியும்.
 • வனசீவராசி வளங்களின் பாதுகாப்பு  மற்றும்  விஞ்ஞான ரீதியிலான  முகாமைத்துவம் தொடர்பான  தரவுகளையும்  தகவல்களையும் சேகரிப்பதற்கான  ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளல்.
 • இயற்கை வளங்களை பாதுகாப்பதை நோக்காகக் கொண்ட  பிற  நிறுவனங்களின் ஒத்தழைப்புடன் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதனூடாக  பாதுகாப்பு செயற்பாடுகளை  வலுப்படுத்தல்.
 • பொதுமக்கள், அரச அலுவலர்கள் ஏனைய  குழுக்கள்  ஆகியோருக்கிடையே வனசீவராசிகள் பாதுகாப்பினை விஸ்தரிப்பதனூடாக அவர்களின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதை  இலக்காகக் கொண்ட வனசீவராசிகள் பாதுகாப்பு கற்கை நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • வனசீவராசிகள் காப்பிடங்களுக்குள்  இயற்கை வளங்களைச் சுற்றி வாழ்விடங்கள்  குறைக்கப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு சமூக பொருளாதார  நிழ்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு  நடைமுறைப்படுத்தல்.