இலங்கை வனசீவராசிகள் பொறுப்பு நிதியம்

நோக்கங்கள்

 • இலங்கையின்  இயற்கை  மரபுரிமைகள், சுற்றாடல் மற்றும் பொருளாதாரப் பெறுமானங்களை  பாதுகாத்தலும்  விருத்தி செய்தலும்
 • வனசீவராசிகள்  மற்றும்  சுற்றாடல் கற்கைகள் பற்றி பிரபல்யப்படுத்தல்
 • இலங்கையின் வனசீவராசிகள்  பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஒத்துழைப்பு  வழங்கல்
 • பாதுகாப்பு வலயங்களை அண்டிய சமுதாய அபிவிருத்தி பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
 • வனசீவராசிகள் / சுற்றாடல் சட்டங்களை பிரபல்யப்படுத்தல்
 • சுற்றாடல் சுற்றுலா வசதிகளையும், தொடர்பாடல்  பணிகளையும் பேணல் மற்றும் ஒழுங்கமைத்தல்
 • இலங்கையின்  இயற்கை மற்றும் கலாசார பெறுமானங்கள்  பற்றி தேசிய மற்றும்  சர்வதேச ரீதியான புரிந்துணர்வை மேம்படுத்தல்

 

நிர்வாகம்

இலங்கை வனசீவராசிகள் பொறுப்பு நிதியத்தின் நிர்வாகப் பணிகளில் 10 உறுப்பினர்கள்  பணிபுரிகின்றனர். அதாவது வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக  தலைவராகவும், வனசீவராசிகள் துறைசார்  அமைச்சின் செயலாளர், வன பரிபாலன  பாதுகாப்பு நாயகம், நிதி   அமைச்சின் பிரதிநிதி, இலங்கை சுற்றுலாச் சபை பிரதிநிதி, மத்திய  சுற்றாடல்  அதிகார சபையின் பிரதிநிதி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும்  தனியார் வர்த்தக துறையின் இருவர் ஆகியோர் உள்ளடங்குவர்.

 

வனசீவராசிகள் பொறுப்பு நிதியத்தின்  வருமானம் வழிவகை

வனசீவராசிகள் பொறுப்பு நிதியத்தின்  அனைத்து பணிகளுக்கும் வருமானம் ஈட்டவேண்டியுள்ளது.அதற்கான  04  வழிமுறைகள்  கீழே  காணப்படுகின்றன.

 • நிதி முதலீடு
 •  ரன்தெனிகல பயிற்சி  நிலைய வசதிகளை வாடகைக்கு விடல்
 • சுற்றாடல்  சுற்றுலா அலுவல்கள்
 • விற்பனை நடவடிக்கைகள் (தொடர்பாடல் பொருட்கள்  ஆகியன)

பாதுகாப்பு சேவைகளை  விருத்தி செய்வதன்  மூலம் வனசீவராசிகள் பொறுப்பு நிதியத்தின்  ஆண்டுக்கான வருமான அதிகரிப்புக்கு அது வழிவகுக்கின்றது

 

 வனசீவராசிகள் பொறுப்பு நிதிய நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும்  சேவைகள்

வனசீவராசிகள் பொறுப்பானது தனது வருடாந்த வருமானத்தின் 50% பல்வேறு பாதுகாப்புச் சேவைகளை பேணும்பொருட்டு செலவிடுகின்றது.

 

• சமுதாய கல்வி நிகழ்ச்சித்திட்டம்

இதன் கீழ் நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், செயலமர்வு, ஆய்வுச் சுற்றுலா, ஒருநாள் விழிப்புணர்வு செயலமர்வு, மூன்றுநாள் வதிவிட ஆய்வுச் சுற்றுலா மற்றும் ஆறுமாத வனசீவராசிகள்  பாதுகாப்பு சான்றிதழ் பாடநெறி  ஆகியன உள்ளடங்குகின்றன. அதற்கு மேலதிகமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களும் வனசீவராசிகள் பொறுப்பினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

 

• பாடசாலைக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சுற்றுலா அலுவல்கள்

இந் நிகழ்ச்சித் திட்டமானது வனசீவராசிகள் பொறுப்பின் பிரதானமான  நிகழ்ச்சித்திட்டமாகும். மிக முக்கியமான  உயிர் பல்வகைமை பெறுமானங் கொண்ட வனசீவராசிகள் வலயத்தை அண்டியுள்ள பாடசாலைகள் தொடர்பாக இதன்போது முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.  வனசீவராசிகள் வலயத்தை அண்டியுள்ள பாடசாலைகளின் செயற்பாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ குழுக்களை  இணைத்து அவர்களது  அடிப்படை பங்குபற்றல் மற்றும் திட்டமிடலின் கீழ் குறுகியகால செயற்பாடுகளைக் கற்பதற்கான திட்டங்கள் ஊடாக இச்  செயற்திட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. .

 

• சமுதாய அமைப்புக்களின் வலுமேம்பாடு

வனசீவராசி பாதுகாப்பு வலயத்தினுள்ளும் சுற்றுச் சூழலிலும் உள்ள மக்களின் அபிவிருத்திச் செயன்முறையை நோக்காகக் கொண்டு சமுக பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாகும். 

 

ஆய்வுகள்

இதன் கீழ் குறித்த துறையில் பல்வேறு மட்டத்திலான  ஆய்வுகள் தொடர்பாக ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுகின்றன. விசேடமாக பல்கலைக்கழக மட்டத்தில் பட்டதாரி அபேட்சகர்கள், பட்டப்பின் பட்ட அபேட்சகர்கள் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும், உயர் தர மாணவர்கள் தொடர்பாகவுமான செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கின்றனர். 

 

• தொடர்பாடல் மற்றும் செய்திப் பிரிவு செயற்திட்டம்

வனசீவராசிகள் பொறுப்பின் விற்பனை நிலையத்தின் வெளியீட்டுப் பணியகம், காட்சிப்படுத்தல் பிரிவுடன் தொடர்புடைய பணிகள் இதனுள் அடங்குகின்றன. தற்போது வனசீவராசிகள் பொறுப்பின் மூலம் தகவல் தொடர்பாடல் மற்றும்  7 விற்பனை நிலையங்கள் மிகவும் வெற்றிகரமாக   முன்னெடுக்கப்பட்டுள்ளன.