கணக்குகள் பிரிவு

அறிமுகம்

அமைச்சின் கணக்குப் பிரிவானது, கொடுப்பனவு, பெறுகை, களஞ்சியம் மற்றும் வள  முகாமைத்துவம், கணக்குகள் ஆகிய 04 பிரதான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பாராளுமன்றத்திற்கு பதிலளிப்பதற்கான கடப்பாடு கொண்ட வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சின் செயலாளர் பிரதான கணக்கீட்டு அலுவலராக நிறைவேற்ற வேண்டிய அமைச்சினதும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களின் நிதிக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்குத் தேவையான நேரடி ஒத்துழைப்புக்களை வழங்குவது இவ் அமைச்சின் பிரதான கடப்பாடாகும். அதற்கமைய  அமைச்சினதும், அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களினதும் நிதிக் கட்டுபாட்டு நடவடிக்கைகளை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், செயற்படுத்தல் மற்றும் அதற்கு உரியதான கட்டுப்பாட்டுப் பணிகள்  இப் பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. 

ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம்  தயாரித்தல், ஒதுக்கீட்டு கணக்குக்கு உரியதான வருமதி செல்மதி மதிப்பீடுகளைத் தயாரித்தல், அவற்றை  திறைசேரியின் உரிய திணைக்களங்களுடன் ஒருங்கிணைத்தல், ஆண்டிற்கான நிதிப்பாய்ச்சல் கட்டுப்பாடு, பெறுகைப் பணிகள், களஞ்சிய மற்றும்  வள முகாமைத்துவம், கொடுப்பனவுப் பணிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கொடுப்பனவு செய்தல், காலோசிதமான நிதி அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுக்கள் உள்ளடங்கிய ஒதுக்கீட்டுக் கணக்குகளைத் தயாரித்தல் மற்றும்  கணக்காய்வாளர் அதிபதி மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பான செயற்குழுவுடன் இணைந்த பணிகளை அமைச்சு மற்றும்  அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் தொடர்பாக செயற்படுத்துவது  இப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. 

பணிப்பொறுப்பு

  • ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்டுள்ள செலவினம்,   நிதிப் பிரமாணம், கட்டளைச் சட்டம், சுற்றறிக்கை  அறிவுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு  அமைய நடவடிக்கைகளை மேற்கொண்டு  முகாமைத்துவப்படுத்தல்.
  • கணக்காய்வாளர் அதிபதி மற்றும் பொதுத் திறைசேரிக்கு அவசியமான மாதாந்த, காலாண்டு, அரையாண்டு வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
  • ஒதுக்கீட்டுக் கணக்கு உட்பட இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல்.
  • களஞ்சியசாலை மற்றும் வள முகாமைத்துவம்.
  • வருடாந்த செலவினம் மற்றும் வருமான மதிப்பீடு தயாரித்தல்