அபிவிருத்திப் பிரிவு

அறிமுகம்

2015.09.21 இப்பிரிவின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு புதிதாகத் தாபுக்கப்பட்டதன் பின்னர், இப் பிரிவின் மூலம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய தாவிரவியல் பூங்காக்கள் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சியக திணைக்களம்  ஆகியவற்றின்  ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப்  பணிகளை முறைசார்ந்தவாறும் விளைதிறனானவாறும் செயற்படுத்தல் மற்றும்  அமைச்சின் பேணல் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தல்.

பணிப்பொறுப்புக்கள்

 • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய தாவிரவியல் பூங்காக்கள் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சியக திணைக்களம் ஆகியனவற்றுக்கு உரியதான பணிளை நடைமுறைப்படுத்தும் போது தேவையான கொள்கைசார் தீர்மானங்களை மேற்கொள்ளல்.
 • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய தாவிரவியல் பூங்காக்கள் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சியக திணைக்களம் ஆகியன தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்கப்பெறும் பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக  நடவடிக்கைகளை  எடுத்தல்.
 • சனாதிபதி செயலகத்திற்குப் கிடைக்கப் பெறுகின்ற வனசீவராசிகள், தாவரவியற் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சியகம் ஆகிய விடயங்கள் சம்பந்தமான பொதுமக்களின் முறைப்பாடுகளை தீர்த்துவைக்கும்  பொருட்டு  உரிய நிறுவனங்களுக்கு அனுப்புதல்.
 • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய தாவிரவியல் பூங்காக்கள் திணைக்களம், தேசிய மிருகக்காட்சியக திணைக்களம் ஆகியனவற்றுக்கு சொந்தமான காணிகள், தொல்பொருளியல் காப்பிடங்களை அண்டிக் காணப்படுகின்ற பிரச்சினைகள், காப்பிடங்களில் வசிக்கின்ற மக்களின் பிரச்சிகைளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை  எடுத்தல்.
 • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய தாவிரவியல் பூங்காக்கள் திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சியக திணைக்களம் ஆகியனவற்றுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்தல், சுவீகரிக்கப்படும் காணிகள் தொடர்பாக நட்டஈடு வழங்குவதற்கு சிபார்சு செய்தல்.
 • தேசிய வனப்பூங்காக்கள், தாவிரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய மிருகக்காட்சியகம் ஆகியனவற்றினுள்  மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள், மின்வேலிகள்  அமைத்தல், காட்டு யானைகள் தரிப்பிட நிலையம்  நிர்மாணித்தல், வாழ்விடங்களை  வளப்படுத்தல் ஆகிய பணிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள்.
 • வனசீவராசிகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சியகம் ஆகியனவற்றுக்கு உரியதான அலுவல்கள்  மற்றும் இவ் அமைச்சின் விடயப் பணிகள் குறித்து பிற அமைச்சுக்களின் மூலம் சமர்ப்பிக்கப்படும்  அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பான அவதானிப்புக்களை முன்வைத்தல்.
 • காட்டு யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களுக்காக தயாரிக்கப்படுகின்ற உத்தேசக் காப்புறுதித் திட்டம் சம்பந்தமாக கொள்கைசார் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்தழைப்பு வழங்குதல்.
 • விக்டோரியா, ரன்தெனிகல, ரன்டபே சரணாலய எல்லைகளை மீள அடையாளமிடும் பணிகளை மேற்கொள்ளல்.
 • காட்டு யானைகளின்  அச்சுறுத்தல் காரணமாக நிகழ்கின்ற உயிரிழப்பு மற்றும்   ஏனைய இழப்பீடுகள் தொடர்பாக நட்டஈடு வழங்குவதற்குத் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை முன்னெடுத்தல்.
 • குரங்குகள் மற்றும் செங்குரங்குகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வு மற்றும் அதற்கான சிபார்சு.
 • யானைகளின்  பாதுகாப்பு  சம்பந்தமான அலுவல்கள்.
 • சுற்றாடல் முறைமை  பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல.
 • நீர் வளங்கள் முகாமைத்துவ பணிகள் தொடர்பாக குறித்த  நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பணிபுரிதல்.
 • இடர் முகாமைத்துவ திட்டம் மற்றும் நிகழ்ச்சித்திட்ட செயற்திட்டம் 2014 - 2018  அமைச்சின் கண்காணிப்பின்  கீழ் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம்  நடைமுறைப்படுத்தல்.
 • பழக்கப்பட்ட யானைக் குட்டிகள் மற்றும்  பிற வனசீவராசி விலங்குகள் சம்பந்தமான கோரிக்கைகள்  பற்றிய அலுவல்களை ஒருங்கிணைத்தல்.
 • கடல்வாழ் முலையூட்டிகள் சம்பந்தமான பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளல்.
 • அமைச்சின்  அனைத்துவித பேணல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளலும அது தொடர்பாக தேவைப்படும் மதிப்பீடுகளை  தயாரித்தல், சிபார்சு செய்தல் மற்றும் கொடுப்பனவு தொடர்பாக சிபார்சு  வழங்கல்.
 • அமைச்சிற்குரிய வளிச்சீராக்கி, தொநலைகல் இயந்திரம், நிழற்பிரதி இயந்திரம் மற்றும் கணனிகளின் பேணல் பணிகளை மேற்கொள்ளல்.