கணக்காய்வுப் பிரிவு

அறிமுகம்                

சகல அமைச்சுகளின் செயலாளர்கள் ஒவ்வொருவரும், பிரதானகணக்கீட்டு அதிகாhரியாக,தனது அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் தொடர்பாக அரசகணக்குக் குழு முன் ஆஜராக வேண்டும். திணைக்களத் தலைவர்களுக்கும் கணக்கீட்டு அதிகாரிகளாக அதேபொறுப்பு ஒப்படைக்கப்படும்.

இந்தபொறுப்புகளை நிறைவேற்றும் செயல்பாட்டில் நிதிஒழுங்;குமுறைவிதிகள் 133 இல் காட்டப்பட்டுள்ள நோக்கங்கள் நிறைவேற்றும் வகையில் உள்ளககணக்காய்வு பிரிவொன்றை நிறுத்தப்படுதல் வேண்டும். 

அதற்காக பிரதான கணக்கீட்டு அலுவலர்கள் மற்றும் கணக்கீட்டு அலுவலர்களுக்கு திறைசேரியிலிருந்து கிடைக்கும் உதவிகள் மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் 2008.01.25 ஆந் திகதி 08/0200/306/012 ஆம் இலக்க அமைச்சரவையின் முடிவின் பிரகாரம் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களம் திறைசேரித் திணைக்களமாக 2008.02.01 ஆந் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் சுயாதீன உள்ளககணக்காய்வு பிரிவுகள் இப்போதைக்கு குறித்த அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் கீழுள்ள உள்ளக கணக்காய்வு பிரிவுகளுக்கு வழிகாட்டும்; நடவடிக்கைகள் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும்.

குறிக்கோள்கள்

பிரதான கணக்கீட்டு அலுவலர்களுக்கு 128 நிதி ஒழுங்;குமுறைவிதிகளின் கீழ் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் தங்களது அமைச்சுக்களின் சார்பாக உள்ளககணக்காய்வு பிரிவொன்றை நிறுவப்படவேண்டியுள்ளதுடன், அக்குறித்த உள்ளக கணக்காய்வு பிரிவின் நோக்கங்கள் 133 ஒழுங்குமுறைவிதிகளுக்கமைய அமையப் பெறுதல் வேண்டும். அதற்கமைய இந்த அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவின் குறிக்கோள்கள் பின்வருமாறுகாட்டப்பட்டுள்ளன. 

 • அமைச்சின் நிதிநடவடிக்கைகள் தொடர்பாக நடாத்தப்படும் உள்ளக மேலாண்மைக்கு பங்களித்து அந்நடவடிக்கைகள் ஏற்படும் தவறுகள் மற்றும் முறைக்கேடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு கையாளப்படுகின்ற உள்ளக விசாரணைகள் சீரான மற்றும் போதியளவு தொடர்வாரியான கணிப்பீடு மற்றும் சுயாதீன மதிப்பாய்வைக் கொண்டு நடாத்துதல்.
 • அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி கருத்திட்டங்கள், முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், திட்டமிடல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் பூர்த்திசெய்வதில் பெற்றுள்ள வளர்ச்சி விதித்துரைகளுக்கு கணக்கீட்டு அலுவலருக்கு மற்றும் வளர்ச்சி மீளாய்வு குழுவுக்குஉதவுதல் 
 • பொருந்தும் சந்தர்ப்பங்களில் இந்த கடமைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மற்றும் திணைக்களத் தலைவர் மற்றும் வளர்ச்சி மீளாய்வு குழுவிடையே ஒருங்கிணைப்பாளராக பங்கெடுத்தல்.

பணிகள்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் போன்ற நிறுவன நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளக கணக்காய்வு பிரிவின் செயல்பாடுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

 • அமைச்சின் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு பிழைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்ளக மேற்பார்வை மற்றும் சீரான அணுகுமுறைகளை தொடர்ந்தும் மதிப்பிடுதல் மற்றும் சுயாதீன மதிப்பாய்வொன்றைபேணுதல்.
 • கணக்குகள் மற்றும் ஏனைய ஆவணங்களில் நம்பகத்தன்மையை சரிபார்த்தல் மற்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கணக்குகள் முறை மூலம் சரியான நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பதற்காக தேவையான தகவல்கள் வழங்குவதனை கண்டறிதல்.
 • பதவியணியினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அவர்களின் செயல்திறன் தரம் நிலைமதிப்பிடுதல்.
 • அமைச்சு சொத்துக்கள் அனைத்து வகையிலான  இழப்புக்களிலிருந்து எவ்வளவு துர்ரம் பாதுகாக்கப்பட்டுள்ளதைக் கண்டறிதல்.
 • அரசின் தாபனவிதிக்கோவை, அரசின் நிதி ஒழுங்குமுறை விதிகள்;; மற்றும் பொதுநிர்வாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் மற்றும் திறைசேரியினல் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ள ஏனைய குறைநிரப்பு மதியுரைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என கண்டறிதல்
 • வீண் விரயம், ஊழல் தடுத்தல் மற்றும் அத்துமீறிய செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளுவது மட்டுமன்றி கடைப்பிடிப்பதற்;கு உள்ளக கட்டுப்பாடு பொறிமுறையின் வெற்றியை ஆராய்தல்
 • அமைச்சின் கணக்கியல் நடைமுறை மற்றும் ஏதும் நிதி செலவிடுவதற்கு உட்படும் அக்குறித்த தொழிற்பாடுகளை ஆராய்தல் மற்றும் அமைச்சின் ஆதனங்கள் மற்றும் சொத்துக்ளைப் பாதுகாப்பான முறையில் சிக்கணத்துடன் முறைசார் விதத்தில் கையாளப்படுவதைக் கண்டறிதல். 
 • தேவையான போதெல்லாம் விஷேடமான விசாரணைகளை நடாத்திவைத்தல்

ஆ) பணிகளைக் கண்காணித்தல், முன்மொழியப்பட்ட முறைகள் மற்றும் கருத்திட்டங்கள் போன்றவற்றின் வளர்ச்சியைக் கண்டறியும் பொருட்டு பிரதான கணக்கீட்டு அலுவலர் மற்றும் முன்னேற்ற / மீளாய்வுக் குழுவுக்கு உதவுவதில் உள்ளக கணக்காய்வுப் பிரிவுக்குரிய செயல்பாடுகள் பின்வருமாறு உள்ளடங்கப்பட்டுள்ளன.

 • தொழில்நுட்ப அல்லது கணக்கு கண்ணோட்டத்திற்கு வெளிவாரியாக முகாமைத்துவ கண்ணோட்டத்தில் அமைச்சின் தொழிற்பாட்டுச் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அவற்றை அறிக்கைவிடுவதற்காக
 • வேலைகள், முன்மொழியப்பட்ட முறைகள் மற்றும் கருத்திட்டங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கால அட்டவனைகள் எவ்வளவு தூரம் தங்கள் நோக்கங்கள் எய்துவதில் மதிப்பிடுவதற்கு
 • வேலை தாமதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் பிரச்சினைகளை துறைவாரியான விசாரணைகளை நடாத்துதல்.
 • இவ்வாறு தொழிற்பாட்டுச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதில் கையாளப்படுகின்ற கட்டுப்பாடுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.