சட்டப் பிரிவு

 

பணிப்பொறுப்பு 

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சுமற்றும் அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் சம்பந்தமாக அமைச்சினால் நிறைவேற்ற வேண்டிய சட்ட விடயங்களைக் கண்காணிப்பதனூடாக உயர் முகாமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கல்.

·       1937 இன் 07 ஆம் இலக்க வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தை (469 அதிகாரம்) 1982 இன் 41 ஆம் இலக்க தேசிய மிருகக்காட்சிசாலை சட்டம் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் சட்டங்களை  நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல்அந்தச் சட்டங்களுக்குத் தேவையான ஒழுங்கு விதிகள்கட்டளைகள் மற்றும் திருத்தங்கள் என்பன தொடர்பான ஆலோசனைப் பணிகளை நிறைவேற்றுதல் ஆகியன இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

· அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்களினால் காலந்தாழ்த்தப்படும் சட்ட விடயங்கள் தொடர்பிலும்,  அமைச்சுக்குக் கிடைக்கின்ற கடிதங்கள் மற்றும் முறைப்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைளை துரிதமாக மேற்கொ​ள்ளல்.

·   அமைச்சு மற்றும் திணைக்களங்கள் தொடர்பாக நிலவுகின்ற  வழக்குகள் சம்பந்தமாக சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் நடத்தப்படும் ஆலோசனை ரீதியான கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளல் மற்றும் போதிய கண்காணிப்பு பணிகள் இந்தச் சட்டப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

·  மேலும்சட்ட ஆலோசனைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஏனைய வழக்கு விடயங்கள் என்பவற்றின் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் இந்தச் சட்டப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

·       தேசிய காப்பிட பூமிதடைசெய்யப்பட்ட காடுகள்தேசிய வனப்பூங்காக்கள்இயற்கையான காப்பிட பூமிவன நுழைவாயில்பாதுகாப்பான இடங்கள்சமுத்திர காப்பிட பகுதிகள்எல்லைகளுக்கிடையேயான வலயங்கள் மற்றும் அபயபூமிகள் என்பனவற்றின் எல்லைகளை மிகச் சரியாக இனங்காண்பதற்கான உரிய  பணிகளை வகுப்பதற்கு திணைக்களத்துக்கு  ஒத்துழைப்பு வழங்கல்.

· அமைச்சுக்கும் திணைக்களத்துக்கும் எதிராகவும்திணைக்களத்தினால் தொடரப்படுகின்ற வழக்குகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்குவதோடு அவ் வழக்குகள் தொடர்பான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

·  பொது மக்களினாலும்மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும்    நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் நடவடிக்கைகள்சம்பந்தமாகவும்செய்யப்படும் பல்வேறுவிதமான முறைப்பாடுகளை  ஆராய்வது இப் பிரிவின் கடப்பாடாகும். பொது மக்களுக்கு கட்டளைச் சட்டத்திலுள்ள விடயங்கள் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.