திட்டமிடல் பிரிவு

அறிமுகம்

 

அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படுவது இப்பிரிவின் மூலமேயாகும். இதன்படி தேசிய தேவைப்பாடுகளைக் கண்டறிந்து அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதுடன், அக்குறித்த திட்டமிடல்கள் அமைச்சுக்குரிய திணைக்களங்கள் மற்றும் தாபனங்கள் மூலம் நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். வருடாந்தசெயல் திட்டங்களின்படி இலக்குகளை எய்துவதற்காக திட்டமிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் இந்தபிரிவு மூலம் நிறைவேற்றப்படும்.

 

பணிப்பொறுப்புக்கள் 

  • அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்தல்.
  •  செயற்பாட்டுத் திட்டத்துக்கு  அமைய  அமைச்சின்  கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள்  மற்றும் நிறுவனங்களுக்கிடையே இணைப்புப் பணிகளை மேற்கொண்டு  மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த முழுமையான மேம்பாட்டை அடைந்துகொள்ளல்,  தகவல்களை  மீளாய்வு செய்து மேம்பாட்டு மீளாய்வு அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டு மீளாய்வு  கூட்டங்களை நடத்துதல்.
  • இவ் அமைச்சுடன்  இணைந்த திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் மூலதனச் செலவின மதிப்பீடு தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் அந்நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்ளை கண்காணித்தலும் செயற்படுத்தலும்.
  • இவ் அமைச்சுடன்  இணைந்த நிறுவனங்களின் அபிவிருத்திப் முன்மொழிவுகள் தயாரிக்கும் போது தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன்  அவற்றை நிதி அமைச்சின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்.
  • 50 மில்லியன் ரூபா தொகையை விட அதிகமான செயற்திட்டங்களின் மேம்பாடு தொடர்பாக  நிதி  அமைச்சுக்கு  அறிக்கையிடல்.
  • அமைச்சின் பாதீட்டுக் குழுவின்போது வழங்கும் பொருட்டு செயலாற்றுகை அறிக்கை தயாரித்தல். 
  • ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை தயாரித்தல்.

 

னாதிபதி செயலகம், நிதி  அமைச்சு, கொள்கை திட்டமிடல் அமைச்சு, இலங்கை  மத்திய வங்கி, பிற நிரல் அமைச்சுக்கள் மற்றும்  பாராளுமன்ற  ஆலோசனைக்  குழுக்கள்  ஆகியவற்றுக்கு அவசியமான தகவல்களை வழங்குதல்.

 

அமைச்சுக்குக் குறித்தொதுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் இற்றைவரையாக்கல்.