யால தேசிய பூங்காவிற்கு மின் – நுழைவுச்சீட்டு அறிமுகப்படுத்தல்

புலிகளை இலகுவாக பார்வையிடக்கூடியவாறான தேசிய பூங்காவாக உலக புகழ்பெற்ற யாழ தேசிய பூங்காவிற்கு ஆண்டுதோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் அளவு சுமார்   5 இலட்சமாகும். தேசிய பூங்காவிற்கு தினமும் சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். பார்வையிடும் கால எல்லைக்குள் பூங்காவிற்கு நுழைவதற்குத் தேவையான நுழைவுச்சீட்டுக்களை பெறுவதற்கு அவர்களுக்கு பூங்காவின் தலைமையகத்தில் அதிகளவு நேரத்தை செலவிட வேண்டியேற்படுகின்றது. இவ்வாறு நுழைவுச்சீட்டுக்களப் பெற்றுக்கொள்ளும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்ளைத் தவிர்ப்பதற்காக யால தேசிய பூங்காவிற்கு மின் நுழைவுச்சீட்டு கடந்த தினத்தன்று அறிமுகப்படுத்துவதற்கு  திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.அதற்கமைய எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் வனசீவராசிகள் பாதுகாப்புத்  திணைக்களத்தின் www.dwc.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் இலகுவாக மின் நுழைவுச்சீட்டுக்களை பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு  வீணாக நேரத்தை செலவழிக்காமல் நுழைவுச்சீட்டுக்களைப்  பெற்றுக்கொள்ளும்  போது ஏற்படும் அசௌகரியங்ளைத் தவிர்த்து  இலகுவாக பூங்காவிற்குள் நுழைவதற்கு இயலுமையாக அமையும்.

கடந்த 05 ஆந் திகதி சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள்  வளங்கள் மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ். எம். சந்திரசேன அவர்களினால் மின் நுழைவுச்சீட்டு யால தேசிய பூங்காவிற்கான வெளியீடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வில்பத்து தேசிய பூங்காவிற்காக இவ்வாறு  மின் நுழைவுச்சீட்டுக்களை வெளியிடுவதற்கு வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கடந்த ஆண்டு செயற்பட்டதுடன் எதிர்காலத்தில் ஏனைய தேசிய பூங்காக்களுக்காகவும் மின் நுழைவுச்சீட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுக்கும். 

இவ்வாறு திணைக்களம் புதிய தொடர்பாடல் தொழில்நுட்ப கையாளுகைக்கு பிரவேசித்து மின் நுழைவுச்சீட்டுக்களை வெளியிடுதல், மின்-பங்களாக்களை முன்பதிவு செய்தல் மற்றும்  ஸ்மார்ட் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் திணைக்கள நடவடிக்கைகள் மிகவும் வினைத்திறன் வாய்ந்த முறையில் மேற்கொள்வதற்கு முடியுமாக இருப்பதாக பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார அவர்கள் கூறியுள்ளார்.