வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு அரசாங்க சேவையிடையேயான ஆக்கத்திறன் போட்டித்தொடரில் குறுநாடக பிரிவின் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

உள்நாட்டு அலுவல்கள் வயம்ப அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க சேவை இடையேயான ஆக்கத்திறன் போட்டித்தொடரில் விருது வழங்கல் கடந்த செம்தெம்பர் மாதம் 29 ஆந் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்நாட்டு அலுவல்கள் வயம்ப  அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் லைமைத்துவத்தில் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ பாலித்த தெவரப்பெரும அவர்களின் பங்கேற்பில் மிகவும் விமர்சையான முறையில் இடம்பெற்றதுடன் அங்கு அமைச்சுக்களிடையே அரசாங்க சேவை குறுநாடக பிரிவில்  போட்டியிட்ட சபத மே கொழம்ப' குறுநாடக துறையில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள்; அமைச்சின் புத்தளம் வனசீவராசிகள் உதவி பணிப்பாளர் அலுவலகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி உதவியாளர் திரு பாலித பிரேமகுமார அவர்களினால் இயற்றப்பட்ட 'ஸபத மே கொழம்ப ' குறுநாடகத்துக்காக நடிப்பில் திரு பாலித பிரேமகுமார அவர்களும் (புத்தளம் வனசீவராசிகள் உதவி பணிப்பாளர்; அலுவலகம்) திரு. சமன் குமார கமகே (தபால் அலுவலகம் - வெலிகம) திரு.விராஜ் நிரோஷன் அவர்களும் செல்வி எம்.எல். குமாரி அவர்களும் (வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள்; அமைச்சு) பங்களித்திருந்ததுடன் நடன அமைப்பாளர் திரு. சமந்த குமார கமகே அவர்களும் (கல்வி அமைச்சு) காட்சியமைப்பு வடிவமைப்பாளர் சுஜித் பிரியந்த பத்திரகே அவர்களும் (மத்திய தபால் பரிமாற்றம்) பங்களித்தது. மேலும் இந்த நாடகத்துக்காக திரு. பாலித பிரேமகுமார அவர்களுக்கு துணை நடிகருக்கான விருதும் திரு. சமன் குமார் கமகே ஆகியோருக்கு ஜுரியில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தான் உட்பட குழுவால் முன்வைக்கப்பட்ட 'ஸபத மே கொழம்ப' நாடகத்துக்காக இரண்டாம்  இடம் கிடைத்தமை பாக்கியமாக கருதுவதாகவும் இதற்காக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள்; அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா அவர்கள் பிரதி அமைச்சர் கௌரவ சுமேத ஜீ. ஜயசேன அவர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் கௌரவ ஆர்.எம்.டீ.பீ. மீகஸ்முல்ல அவர்கள் உட்பட பதவியணியினர் காட்டிய ஆதரவு மிகவும் போற்றக்கூடிய விடயமெனவும் இது தொடர்பாக நடிகர் குழு கருத்து தெரிவித்திருந்தது.