உலக சிறுவர் நினைவு தின வைபவம் சுமேதா ஜி. ஜயசேன பிரதி அமைச்சரின் தலைமைத்துவதத்தில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையகத்தில்.

நாற்பதாயிரத்துக்கு அதிகமானோர் ஒக்டோபர் 01 ஆந் திகதியன்று தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பார்வையிட்டுள்ளதாகவும் இவர்களில் முப்பத்து மூவாயிரம் பேர் (33,000) பாடசாலை சிறார்களெனவும்;, பதினேழாயிரம் (17000) பேர் பெரியோர்களெனவும் நேற்றைய தினத்தன்று கிட்டத்தட்ட பதினேழு இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் தகவல்களிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

உலக சிறுவர் நினைவு தின வைபவம் நேற்றைய தினம் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேத ஜீ ஜயசேன தலைமைத்துவத்தில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றது.

அன்றைய தினம் பாடசாலை சிறார்களுக்கு இலவசமாக  பிரவேசிப்பதற்கான அனுமதியும், சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள், பொழுதுபோக்குசார்ந்த விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு நிகழச்சித்திட்டங்கள் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

அதற்கு மேலதிகமாக பல பாடசாலைகளால் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் யானைகள் நடனம் உட்பட விலங்கினங்களின் பல்வேறு செயற்பாடுகளுடனான வேடிக்கை விளையாட்டுக்காட்சிகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் பிரதி அமைச்சரின் கையால் வழங்கப்பட்டது.

நாட்டை பொறுப்பேற்பதற்கு இருக்கின்ற சிறுவர்களுக்காக ஒரு நாள் மாத்திரம் அல்லாது வருடத்தின் அனைத்து நாட்களும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என  பிரதி அமைச்சர்; சுமேத ஜீ ஜயசேன அவர்கள் அங்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். உலக சிறுவர் தினமும் அதேபோன்று முதியோர் தினமும் ஒரே நாளில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு  வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி தம்மிக்கா மல்சிங்ஹ, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பணிப்பாளர் திருமதிஅனோமா பிரியதர்ஷனி போன்றோர் உட்பட பதவியணியினர், பாடசாலை சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட அதிகளவு பேர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.