பெப்ருவரி 02 ஆம் திகதி உலக ஈரநிலங்கள் தினம் கொண்டாடப்படுகிறது

பூமா தேவியின் நிலைப்பாட்டிற்காக அளப்பறிய பங்களிப்பை ஆற்றுகின்ற  ஈரநிலங்கள் பாதுகாப்பதில் உலக மக்கள் அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய சிறப்பான நாளாக ஒவ்வொரு வருடமும் பெப்ருவரி 02 ஆம் திகதி அமைந்துள்ளது. இம்முறை உலக ஈரநிலங்கள் தின கருப்பொருளாக "ஈரநிலங்கள் மற்றும் பல்லுயிர் மாறுபாடு" அமைந்துள்ளது.,

உலக ஈரநிலங்கள் தின தேசிய நிகழ்ச்சித்திட்டம் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பங்கேற்புடன் பெப்ருவரி 03 ஆந் திகதி மாண்புமிகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் தலைமைத்துவத்தில் “அபே கம” வளாகத்தில் நடைபெறும்.

தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு இணைவாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுதின கொண்டாட்டம் பெப்ருவரி 02 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு வில்பத்து மரதன்மடுவ பிரதேசத்தில் நடைபெற்றது. அங்கு வில்பத்து தேசிய பூங்கா அண்டிய பகுதிகளில்  அமைந்துள்ள பாடசலைகளில் கல்வி கற்கும் மாணவர்களினதும் ஈடுபாட்டுடன் உலக ஈரநிலங்கள் தின பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டதுடன் நினைவுதின சொற்பொழிவு பணிப்பாளர் செயல்முறை திரு மஞ்சுல அமரரத்ன அவர்கள் ஆற்றினார்.

மற்றைய ரம்ஸா ஈரநிலங்களான பூந்தல தேசிய பூங்கா ஆனைவிழுந்தான் சரணாலயம் மற்றும் சுண்டிகுளம் தேசிய பூங்கா ஆகிய இடங்களிலும் ஈரநிலங்கள் நினைவுதின  கொண்டாட்டங்கள் நடாத்துவதற்கு வருடாந்த செயல்முறைத் திட்டத்துக்கமைய நடவடிக்கைகள் இடம் பெற்றன.