வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வன வளப் பாதுகாவலர் நாயகம் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தகைமைகள்: இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தினைச் சேர்ந்த அல்லது இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தரத்தினைச் சேர்ந்த உத்தியோகத்தர்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்:
சுய விபரத்துடன் கூடிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2020.11.20 ஆம் திகதிக்கு முன்பாக உரிய தமது நிறுவனங்களின் தலைவர்களினூடாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியானது விண்ணப்பத்தினைக் கொண்டுள்ள தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்பாக info@msdw.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தின் முன்கூட்டிய பிரதியொன்றினை அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பமானது அரசாங்க ”தேசிய கொள்கை சட்டகம்”, கொள்கை கூற்று மற்றும் வன வளப் பாதுகாப்பு விடயம் தொடர்பான நோக்கு மற்றும் தற்போது நாட்டிலுள்ள வன வளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான சவால்கள் என்பவற்றின் மீதான மூலோபாய மீளாய்வுடன் இணைந்த வகையில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். நேர்முகப் பரீட்சையின் போது, அது தொடர்பில் செயல்முறை விளக்கமொன்றும் நடாத்தப்படுதல் வேண்டும். விண்ணப்பத்தினைக் கையேற்கும் போது மேற்குறித்த செயல்முறை விளக்கமானது உங்களுக்கு வழங்கப்படும்.
செயலாளர்,
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு,
இல.1090,
சிறி ஜயவர்தனபுர மாவத்தை,
ராஜகிரிய.