பாதுகாக்கப்பட வேண்டிய CrudiaZeylanica தாவரம்

CrudiaZeylanica என்று அழைக்கப்படும் தாவரமானது அழிவின் விளிம்பிலுள்ள (Critically endangered) இலங்கைக்கேயுரிய தனிச்சிறப்புமிக்க தாவர வகையாகும் .

CrudiaZeylanica ஆனது அழிந்துவிட்டதாக கருதப்பட்ட ஒரு தாவரமாகும்.எனினும், தற்சமயம் CrudiaZeylanica தாவரங்கள் சில கம்பஹா பிரதேசத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த CrudiaZeylanica தாவரங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

நீங்கள் வசிக்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு பகுதியில் இந்த ஒரு தாவரம் அல்லது பல தாவரங்கள் இருந்தால், உடனடியாக தயவுசெய்து பின்வரும் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருவதன் மூலம் மரத்தின் பாதுகாப்பிற்காக உங்களுக்கும் பங்களிக்க முடியும், இத்துடன் இருக்கும் புகைப்படங்களை காண்பதன் மூலம் இலகுவாக தாவரங்களை அடையாளங் காண முடியும்.

CrudiaZeylanica தாவரம்

                                                    

          CrudiaZeylanica தாவரம்                                                                      இலைகள்                                 இலைகளின் குறிப்பு     கம்பஹா, தரலுவ புகையிரத நிலையத்துக்கு

அண்மையில் அமைந்துள்ள தாவரத்தின் புகைப்படமாகும். 

 

 

CrudiaZeylanica தாவரமானது  அவரையினத்தைச் சேர்ந்த அழிவின் விளிம்பிலுள்ள (Critically endangered) இலங்கைக்கேயுரிய தனிச்சிறப்புமிக்க தாவர வகையாகும். இந்த தாவரம் பூமியிலிருந்து அழிந்துவிட்டதென கருதப்பட்டிருந்தாலும், இதுபோன்ற பல தாவரங்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து மீண்டும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

 

எம்.கே.பந்துல ஹரிஸ்சந்திர

செயலாளர்

வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

 

 

தொலைபேசி இலக்கம்        -    0113671490

தொலைநகல் இலக்கம்        -    0112879051

மின்னஞ்சல்                         -    info@msdw.gov.lk