தெஹிவளை மிருககாட்சிசாலை இரவுநேரங்களில் திறந்து வைப்பது கல்வித்துறை மற்றுமல்லாது விலங்கினங்கள் மற்றும் மனித சகவாழ்வின் வெற்றியாகும்.

புத்தசாசன, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள், வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேத ஜீ. ஜயசேன மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோர் உட்பட பாராளுமன்ற அமைச்சர்களின் தலைமைத்துவத்தில் செப்தெம்பர் மாதம் 21 ஆந் திகதி தெஹிவளை மிருககாட்சசாலை இரவு நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கமைய ஒவ்வொரு வார நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு போன்ற மூன்று நாட்களிலும் இரவு 7.00 மணியிலிருந்து 10.00 மணி வரையும் தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திற்கு மாத்திரம் விசேட வலயம் இதற்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் சுறுசுறுப்புடன் இரவில் நடமாடுமாடுகிற மிருகங்கள் மாத்திரமே காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்காக உணவு பானவகைகள், இரவுநேர சுற்றுலா வசதிகளுக்காக (Buggy Carts) இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இரவு காலத்தில் சுறுசுறுப்புடனான மிருகங்களின் நடத்தை முறைகள் உன்னிப்பாகவும் மற்றும் இயற்கையாகவும் பார்வையிடுவதற்கு தென் ஆசியாவிலே உள்ள ஒரேயொரு இடம் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையாக இருப்பது விசேடமானதாகும். கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அமைச்சரின் கருத்துருவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இது இலங்கை சமூகத்திற்கு மெய்ந்நிலையான இரவுநேர கலாசாரத்தை அறிமுகப்படுத்திய கோட்பாடாக குறிப்பிட முடியும்.

பகற்நேரங்களில்போன்று இரவு நேரங்களிலும் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மக்கள் மத்தியில் உயர் கேள்வி நிலவிவருவதாக, இற்றையாகும்போது அறிக்கையிடப்பட்டுள்ள வருமான கூற்றுக்களின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதை மிருகக்காட்சிசாலையின் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திருமதி. தம்மிக்கா மல்சிங்ஹ அவர்கள் கூறியுள்ளார். மிருகங்களை பார்வையிடும்போது அமைதியைக் கடைபிடித்தல், நிழற்படங்களை எடுக்கும்போது (Flash Lights) உபயோகிக்கக் கூடாது, விலங்கினங்களுக்கு உணவு வகைகள் வழங்குதல் மற்றும் மிருகங்களின் இயற்கை நடத்தைகளுக்கு இயல்பல்லாத எந்தவொரு செயலுக்கும் எதிராக தண்டப்பணம் அறவிடுமாறும் அதிகாரிகளுக்கு தங்கள் அறிவித்துள்ளதாக கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அமைச்சர் கூறுகின்றார்.

இரவுநேரத்தில் மிருகக்காட்சிசாலை திறந்துவைக்கும் முக்கிய நோக்கம் கல்வி ரீதியாக அவ் அனுபவங்கள் இலங்கைக்கு வழங்குவதற்காகவே என்றும், விலங்கினங்களின் நடத்தைகளுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் யாதாயினுமொரு செயல் நிகழ்வதாயின்; தான் அதனை கண்டிப்பதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார். விழிசார் நரம்புகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலானதும் சர்வதேச தரங்களுக்கு இயைவானதாகவும் உள்ள மின்குமிழ்களே விலங்கினங்களுக்காக உபயோகிக்கப்படுத்தியுள்ளன. விலங்கினங்கள் மற்றும் மனித சகவாழ்வு வடிவமைத்தலே இவ்வனைத்து செயல்பாடுகளினதும் இறுதி நோக்கமெனவும், விலங்கு வன்முறையல்லவெனவும், காமினி ஜயவிக்வர பெரேரா அமைச்சர் கூறுகிறார்.