அரச மரக்கூட்டுத்தாபனத்தின் வீட்டு தளவாடங்கள் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு NVQ தேர்ச்சித் திறன்களை வழங்குதல்

அரச மரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வருகின்ற வீட்டுத்தளவாடங்கள் தயாரிப்பு தொடர்பில் பல வருட அனுபவம் இருந்தாலும்தகுதியான பதவிகளின் வகையினங்களுக்குதேர்ச்சித் திறன்களைபூர்த்திசெய்யாத 16 ஊழியர்களின் குழு தேர்ந்தெடுத்து கட்டுபெத்த கைத்தொழில்துறை பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் வள பங்களிப்பிலிருந்து NVQ 03 மற்றும் NVQ 04 மட்டம் குறித்த  50 மணி நேர பயிற்சி நிகழ்ச்சித்திட்மொன்று நடத்தப்பட்டது.

பயிற்சியின் முடிவில், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பாடநெறி பயிற்றுவிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் RPL (Recognition of Prior Learnt) மட்டத்தினைப் பெற்றுக்கொண்டிருப்பதுடன் அதற்குரிய தகுதிச் சான்றிதழ் வழங்கும் வைபவம் அரச மரக் கூட்டுத்தாபனத்தின்  தலைவர் மற்றும் பொது முகாமையாளரின்  தலைமைத்துவத்தில் ​சமீபத்தில் கல்தெமுல்​ல மர தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் நடைபெற்றது.