அமைச்சரின் சீனா விஜயத்தின் மூலம் நாட்டிற்கு பல அபிவிருத்திக் கருத்திட்டங்கள்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் மே மாதம் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு சுற்றாடல் வளங்கள் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அபிவிருத்தி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடுதல் இரு நாடுகளின் அமைச்சர்களிடையே இடம்பெற்றது.

உள்நாட்டு சுற்றுச் சுழல் மற்றும் மிருக பாதுகாப்பு தொடர்பில் முன்னுரிமையளித்து அதற்காகத் தேவையான சிறப்பறிவு, பயிற்சி வழங்குதல், தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் அறிவு இரு நாடுகளிடையே பரிமாற்றிக்கொள்ளுதல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு ரீதியாக இலங்கையின் சுற்றாடல் மிருக மற்றும் தாவரவியல் பாதுகாப்பு வளர்ச்சிக்கு இது அரியதொரு சந்தர்ப்பமாக அமைவதுடன், சீனா மற்றும் இலங்கை நட்புறவு மேலும் உறுதிப்படுத்தப்படும். ஆரம்ப காலத்திலிருந்தே பட்டுப் பாதையில் தொடங்கி பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு, இவ்வாறான உறவுகள் மூலம் வலுப்படுத்தப்படுவதாகவும், இலங்கை இற்றையாகும்போது உலகின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக தீவிர கவனத்திற்குட்பட்ட நாடாகவும் திகழ்வதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.