ஹம்பாந்தோட்டை – சூரியவெவயோதகண்டிய - திஸ்ஸமஹாராம – மத்தளை ஆகிய பிதேசங்களில் நிலவுகின்ற மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தல் , இப்பகுதியில் உள்ள சேனை விவசாயிகள் மற்றும் சிறுதொழில் விவசாயிகளின் நில பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெறுவதும

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ யோதகண்டிய​ - திஸ்ஸமஹாராம – மத்தளை ஆகிய பிதேசங்களில் நிலவுகின்ற மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தல்,இப்பகுதியில் உள்ள சேனை விவசாயிகள் மற்றும் சிறுதொழில் விவசாயிகளின் நில பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெறுவதும் நோக்காகக்கொண்டு​சிறப்பு கலந்துரையாடல் வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சி.பி. ரத்நாயக்க  அவர்கள் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் இராஜபக்ஷ அவர்களின்  தலைமைத்துவத்தில் 2021.01.11 ஆந் திகதி ராஜகிரியவில்  அமைந்துள்ள வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  பந்துல  ஹரிஸ்சந்திர, இராஜாங்க  அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வபெற்ற) பாலிதா பெர்னாண்டு, வனசீவராசிகள் பணிப்பாளர் எம்.ஜீ.சி சூரிய பண்டார, வன பாதுகாப்பு பிரதிப் பணிப்பாளர் நாயகம்  எம்.ஏ. பண்டார முதலிய அதிகாரிகளுடன் அமைச்சின் மற்றும் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் ஹம்பாந்தோட்டை – சூரியவெவ யோதகண்டிய​ - திஸ்ஸமஹாராம  முதலிய பிரதேசங்களின் விவசாயிகள் அமைப்புகள்  மற்றும் பிரதேச சபை பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தின்போது மனித – யானை மோதல் கட்டுப்படுத்தும் பொருட்டு இடிந்த நிலையிலுள்ள மின்சார வேலிகள் உடனடியாக  அமைத்துக் கொடுப்பதற்கும் , யானை வேலிகள்மற்றும் யானை அகழ்வெட்டுக்களை பராமரிப்பதற்காக இப்பகுதியில் உள்ள ஈமச் சடங்கு சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் உதவியைப் பெறுவதற்கும், யானை வேலி அமைக்கும் போது எல்லையில் சிக்கியுள்ள யானைகளுக்குஉடவலவை வரை பயணம் செய்வதற்கு ஒரு பாதை (யானை நடைபாதை) இரு வாரத்துக்குள அக்குறித்த முன்மொழிவு துரிதமாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு  அமைச்சர் கௌரவ சி.பி. ரத்நாயக்க அவர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மதியுரை வழங்கப்பட்டது.